அக்கரைப்பற்றில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் படுகொலை; காட்டிக் கொடுத்தது கைத்தொலைபேசி

🕔 January 27, 2016
Pradeep eknaligoda - 012டகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் நம்பப்படுகிறது.

பிரகீத் எக்னலி கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்கும் ராணுவ அதிகாரியின் கைத்தொலைபேசி சமிக்ஞையினை வைத்து இந்த விடயம் கண்டயறியப்பட்டுள்ளது.

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இது குறித்து முக்கிய தகவல்களை திரட்டியுள்ளனர்.

ராணுவ புலனாய்வாளர்களால் கடத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொடவை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து படுகொடு செய்திருக்கலாம் என்பதற்கான சாத்தியங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள காட்டுப்பகுதி அல்லது கடலில், இக்கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

கிரிதலே ராணுவ முகாமிலிருந்து கண்கள் கட்டப்பட்ட நிலையில், பிரகீத் எக்னெலிகொடவை ராணுவ கேணல் தர அதிகாரிபொருவர் அழைத்துச் சென்றதாகவும், அவ்வாறு அழைத்துச் சென்று சில மணி நேரத்தின் பின்னர், குறித்த அதிகாரியின்  கைத் தொலைபேசி அக்கரைப்பற்று சமிக்ஞைக்குட்பட்ட பகுதியில் இருந்ததாகவும் கண்டயியப்பட்டுள்ளது.

குறித்த ராணுவ அதிகாரி,  பிரகீத் படுகொலையுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டமைக்கான ஆதாரங்கள் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது.

பிரகீத் எக்னெலிகொட படுகொலை விவகாரம் தொடர்பில், கேணல் தர அதிகாரியொருவர் உள்ளிட்ட ஆறு ராணுவப் புலனாய்வாளர்கள் தற்போது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்