வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இவ்வருடம் நாட்டை விட்டு வெளியேறியோர் தொகை பற்றிய தகவல் வெளியீடு

🕔 September 4, 2023

லங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து கொண்டு, நேற்று (03) வரை 200,000 க்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர் என, பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ்வருட ஆரம்பத்திலிருந்து நேற்று மாலை வரை மொத்தமாக 200,026 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, கடந்த வருடம் மொத்தமாக 311,000 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறியிருந்தனர், இதுவே அதிக எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 300,000 ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்