02 கோடி 90 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைக் கடத்த முயற்சித்த பெண், விமான நிலையத்தில் கைது

🕔 August 31, 2023

பெருந்தொகையான மாணிக்கக் கற்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக கடத்துவதற்கு முயற்சித்த ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்

கொழும்பைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் 2.311 கிலோ கிராம் பெறுமதியான மாணிக்கக் கற்களை கடத்த முற்பட்டபோது, சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த மாணிக்கக் கற்களை இவர் தனது ஆடைகளுக்குள் மறைத்து வைத்து இந்தியாவுக்கு கடத்த முயற்சித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட மாணிக்கக் கற்களின் பெறுமதி 2 கோடி 90 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்