ஜி.எல். பீரிஸின் ராப்போசனங்களில் பங்கேற்ற சஜித்: கடுமையான தீர்மானங்கள் கலந்துரையாடப்பட்டதாக தகவல்

🕔 August 20, 2023

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு வழங்கிய இரு இரவு விருந்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றமை குறித்து அரசியல் அரங்கில் பரவலாக பேசப்படுகிறது என சன்டே ஒப்சேவர் செய்தி வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் பீரிஸின் தனிப்பட்ட இல்லத்தில் மேற்படி இரவு விருந்து இடம்பெற்றதுடன், எதிர்க்கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து சில கடுமையான தீர்மானங்களும் கலந்துரையாடப்பட்டன.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமின்றி, ஐக்கிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குழுவின் சார்பில் டளஸ் அழகப்பெரும, நாலக கொடஹேவா, வசந்த யாப்பா பண்டார, லலித் எல்லாவல உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்த ராப்போசன விருந்தில் கலந்துகொண்டது.

அந்த இரண்டு இரவு விருந்துகளில் ஒன்றில் ரஞ்சித் மத்தும பண்டார கலந்து கொண்டார். இரண்டு இரவு விருந்திலும் எதிர்க்கட்சித் தலைவரின் நண்பரான வர்த்தகர் லக்ஷ்மன் பொன்சேகா கலந்து பங்கேற்றிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் தொடர்பு (டீல்) வைத்துக் கொள்வதால், டலஸ் அழகப்பெருமவின் குழு விரைவில் ஐக்கி மக்கள் சத்தியுடன் இணைய வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பரிந்துரைத்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் பலம் பெற்றால் இந்த டீல் நடவடிக்கையை நிறுத்த முடியும் எனவும் சஜித் பிரதேமதாஜ தெரிவித்துள்ளார் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்