நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணம் சுமார் 27 லட்சம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிப்பு

🕔 August 4, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்குப் பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நலின் ஹேவாகே இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்காக வழங்கப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 26 லட்சத்து 82 ஆயிரத்து 246 ரூபாய் 57 சதம் இன்னும் செலுத்தப்படவில்லை என – ஹேவாகே தெரிவித்துள்ளார்.

இந்த கட்டணத்தொகை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், இலங்கை மின்சார சபையிடம் தான் கேட்ட விபரங்களுக்கு மின்சார சபை வழங்கிய பதிலில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்த விடயத்தில் தனக்கு சரியான விளக்கத்தை மின்சார சபை வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்