ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீடு

🕔 January 25, 2016

Janoos - book - 01
– அஷ்ரப் ஏ. சமத் –

லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும், கவிஞருமான  சாய்ந்தமருதைச் சேர்ந்த எஸ். ஜனுாஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மருதாணை வை.எம்.எம். ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.

கலாபூஷணம் கவிஞா் அலி அக்பா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாக வருகை தந்திருந்தார்.

கவிதை நூலின் முதற்பிரதியினை புரவலர் ஹாசிம் உமர், அமைச்சர் ஹக்கீமிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறூக், அமைச்சர் ரஊப் ஹக்கீமின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூர், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், கவிஞர் மேமன் கவி, முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சி. எஹ்யாகான் மற்றும் அறிவிப்பாளரும் அதிபருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி உள்ளிட்ட பலர் அதிதிகளாகவும், பேச்சாளர்களாகவும் கலந்து கொண்டனர். Janoos - book - 06Janoos - book - 03
Janoos - book - 05

Comments