தலைப்புச் செய்திகள்

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக அபேவிக்ரம கடமையேற்பு

– பாறுக் ஷிஹான் –

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சிந்தக அபேவிக்ரம இன்று (10) காலை 10.05 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.

இவர் இதற்கு முன்னர் தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார்.

இப் பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன், அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட செயலாளராக இதற்கு முன்னர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் பணியாற்றியிருந்தார்.