மன்னம்பிட்டி ஆற்றில் பஸ் வீழ்ந்து விபத்து: 10 பேர் பலி, 09 பேர் கவலைக்கிடம்

🕔 July 9, 2023

(முன்ஸிப்)

பொலநறுவை – கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பஸ், மன்னம்பிட்டி பாலத்திலிருந்து விலகி – ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

களத்திலுள்ள ஊடகவியலாளர் மூலம் ‘புதிது’ செய்தித்தளம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

வைத்தியசாலையில் 43 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 09 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அங்கிருக்கும் ஊடகவியலாளர் புதிது செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

குறித்த பஸ் வண்டியில் 60க்கும் மேற்பட்டோர் பயணித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மன்னம்பிட்டி பாலத்தில் ஏற்கனவே பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமையும், உயிர்கள் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றிரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆற்றில் வீழ்ந்த பஸ் வண்டி தற்போது வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

Comments