‘அன்று பின்வாங்கினார், இன்று உதை வாங்கினார்’: ‘பொடியன்’ விவகாரத்தில் சிக்கிய மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்து மனோ கணேசன் பதிவு

🕔 July 4, 2023

ளைஞர் ஒருவரை ஜப்பானிலுள்ள விகாரையொன்றினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ள சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்து, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

‘ஞானத்துக்குப் பின்னால் நிற்கும் மெய் ஞானம்’ எனும் குறிப்புடன், ஞானசார தேரர் மற்றும் மாகல்கந்தே சுதந்த தேரர் ஆகியோருடன் தான் நிற்கும் புகைப்படமொன்றை பகிர்ந்து, மனோ கணேசன் அந்தப் பதிவை இட்டுள்ளார்.

அதில், ‘2016ஆம் வருடம் ஞானசார தேரருடன் என் அமைச்சுக்கு வந்து, சரத்திரம் தொடர்பில் எனக்குப் படிப்பிக்க முயன்றபோது, அன்று – உப்பு, புளியுடன் நான் தந்த பதிலைக் கேட்டுப் பின்வாங்கினார். இன்று ஜப்பானில் பாலியல் வழக்கில் மாட்டி உதை வாங்கினார்’ என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குறிப்புக்கு ‘ஜப்பானில் கல்யாண ராம தேரர்’ என, மனோ தலைப்பிட்டுள்ளார்

இளைஞர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் மாகல்கந்தே சுதந்த தேரரை, விகாரையொன்றினுள் சிலர் சுற்றி வளைத்து திட்டுகின்ற வீடியோ ஒன்றினை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்