உதவி பெறத் தகுதியானவர்களின் பட்டியல் அடுத்த வாரம் வெளிவரும்: ராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல்

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கான உதவிகளைப் பெறத் தகுதியானோர் பட்டியல், அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ‘அஸ்வெசும’ பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகளை இதுவரையில் யாராவது சமர்ப்பிக்கவில்லையெனில், அதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மேன்முறையீட்டுச் செயற்பாடுகள் திருப்தியடையாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட மேன்முறையீடுகளின் பிரதியை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் தேவைகளுக்காக ‘அஸ்வெசுன’ நலன்புரி திட்டத்துக்கு எதிராக – மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.