விமானப் படையின் புதிய தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

🕔 June 30, 2023

லங்கை விமானப்படையின் 19வது தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச இன்று (30) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய விமானப்படைத் தளபதி நேற்று புதன்கிழமை (28) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

அவரின் சிறந்த சேவையை பாராட்டி, புதிய நியமனத்தை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரையின் பேரில், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், எயார் வைஸ் மார்ஷல் பதவியில் இருந்து எயார் மார்ஷல் பதவிக்கு உதேனி ராஜபக்சே பதவி உயர்வு பெற்றார்.

புதிய விமானப்படைத் தளபதி 1988 இல் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் சேர்ந்த பின்னர், தனது ராணுவ வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு அவர் அடிப்படைப் போர்ப் பயிற்சியைப் பெற்று மின் பொறியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, அனுராதபுரம் முகாம் இலக்கம் 01 இல் விமானப் பயிற்சியில் சிறந்து விளங்கி, 33ஆவது விமானக் கெடட் பாடநெறியில் – சிறந்த கேடட் என்ற சிறப்பைப் பெற்றார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளுடன், அவர் ஒரு விமான அதிகாரியாக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினார்.

அவரின் தற்போதைய நியமனத்துக்கு முன்னர், விமானப்படையில் தலைமை தளபதியாக இரண்டாவது பதவியில் இருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்