துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

🕔 June 18, 2023

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது – அடையாளம் தெரியாத நபர்கள் மினுவாங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மேற்படி இருவரும் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை பஸ்தியன் மாவத்தைக்கு அருகில் நடந்த மேற்படி துப்பாக்கிச் சூட்டை அடுத்து, சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாக தெரியவருகிறது.

காயமடைந்தவர்கள் 33 மற்றும் 43 வயதுடையவர்கள் என்றும், ஹீனட்டியான பகுதியில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ரி56 ரக துப்பாக்கி இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்