மேலும் 5500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

🕔 June 14, 2023

ட்டதாரி ஆசிரியர்கள் மேலும் 5 500 பேர் – எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

35 வயதுக்கு மேற்படாத பட்டதாரிகளே, ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாளை மறுதினம் 7 500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின், 40 பாடவிதானங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள 39 மத்திய நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக, பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசித சமரகோன் தெரிவித்துள்ளார்.

இதற்காக 37 அரச பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

எனினும், எந்தவொரு பாடசாலையும் முழுமையாக மூடப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்