அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமது எம்.பிகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி ஆராய்வு

🕔 June 6, 2023

ரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (5) மாலை கூடிய போது, இவ்விடயம் ஆராயப்பட்டது.

“அரசாங்கத்தில் இணைந்த 09 நாடாளுமுன்ற உறுப்பினர்கள் பற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த எம்.பி.க்கள் தொடர்பாகவும், நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திறமையாக முன்னோக்கிச் செல்கிறது. இந்த சகாப்தத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய தெரிவு என்றும் நாங்கள் நினைக்கின்றோம்” என, நேற்றைய கூட்டம் குறித்து – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கூறினார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு அமைய அரசாங்கத்தில் இணைந்து கொண்ட நாடாமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கட்சி மீளாய்வு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்