யூரியா விலை குறைகிறது

🕔 May 31, 2023

ரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் 50 கிலோ கிராம் எடை கொண்ட யூரியா உரம் மூடை ஒன்றின் விலை எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படுகின்ற 50 கிலோகிராம் எடை கொண்ட யூரியா உர மூடையை 9 ஆயிரம் ரூபாவுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை விவசாயிகள் இந்த வாரம் உர வவுச்சர்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வவுச்சர்கள் தற்போது விநியோகிக்கப்படுகின்ற நிலையில் அதற்கு 10 நாட்களேனும் எடுக்கும்.

எனவே வவுச்சர்கள் இந்த வாரம் கிடைக்காவிட்டால் விவசாயிகள் அது குறித்து தங்களுக்கு அறியப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்