33 வருடங்களுக்கு முன்னர் கணவனைக் கொன்ற மனைவி: பொலிஸில் மகன் முறைப்பாடு: ஊருபொக்க பகுதியில் சம்பவம்

🕔 May 15, 2023

னது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையை 33 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்ததாக – நபர் ஒருவர் ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தற்போது வலதுகுறைந்துள்ள தாய், “நான் செய்தது பாவம்” என தனது சொந்த சகோதரியிடம் கூறி கொலையை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதற்கமைய, அவரின் மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தததுடன், தனது தந்தை கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கழிவறை குழியையும் பொலிஸாரிடம் அடையாளம் காட்டியுள்ளார்.

அதனையடுத்து, ஊருபொக்க பொலிஸார், நீதிமன்றுக்கு இதனை அறிவித்துள்ளதோடு, உடல் எச்சங்கள் இன்று (15) நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்