திடீர் தீயின் காரணமாக, 15 ஏக்கர் காடு நாசம்

🕔 January 20, 2016

Fire  - 013
– க. கிஷாந்தன் –

ட்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயின் காரணமாக, சுமார் 15 ஏக்கர் விஸ்தீரமான காடு நாசமடைந்துள்ளது.

ஹட்டன் – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு சொந்தமான நிவ்வெளி தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 07 மணியளவில் இந்தக் காட்டுத் தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காட்டுத் தீ இயற்கையாக ஏற்பட்டதா அல்லது நாசகார வேலையா என இதுவரை தெரியவில்லை என, நோர்வூட் பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், காட்டுத் தீ தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.

நோர்வூட் பொலிஸாரின் முயற்சியின் காரணமாக, சில மணிநேரங்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Fire - 014Fire - 012

Comments