உள்ளூராட்சித் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைப்பு

🕔 April 19, 2023

ள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு திறைசேரியில் இருந்து பணம் விடுவிக்கப்படாமைக்கு தீர்வு காணப்படாததால், மேற்கண்ட திகதியில் வாக்குப்பதிவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மார்ச் 09ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், அந்தத் திகதியிலும் நடத்த முடியாமல் போனமை குறிப்பிடத்கதக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்