அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, டயானா கமகே எம்.பி ஆகியோருக்கு இடையில் சண்டை

🕔 April 6, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற இளைஞர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பை அதிகரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுக் கூட்டத்தில் இந்த சண்டை நடந்துள்ளளது.

குழு அறையை விட்டு வெளியேறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவிடம், அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அமைச்சர் ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது டயானா கமகே ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்துக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, அங்கு உடனடியாக பேசுவதற்கு தான் ஆட்சேபனை தெரிவித்ததாலேயே, தன்னை வெளியேறுமாறு கூறியதாக டயானா கமகே டெய்லி மிரருக்கு கூறியுள்ளார்.

“ஒரு குழுவின் தலைவருக்கு – உறுப்பினர் ஒருவரை துரத்துவதற்கு உரிமை இல்லை. சபாநாயகர் கூட எம்பியை எப்போது வேண்டுமானாலும் வெளியே அனுப்ப முடியாது. சபாநாயகருக்கு அத்தகைய உரிமை இருந்தால், பல எம்.பி.க்களை சபையை விட்டும் அவர் தவறான முறையில் வெளியேற்றியிருப்பார் ”என்றும் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்