பண்டார நாயக்க விமான நிலையத்தில் குண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பெடுத்து ‘பகிடிக்கு’ சொன்ன மாணவன்: பின்னர் நடந்தது என்ன?

🕔 March 26, 2023

ண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டள்ளதாக தொலைபேசி மூலம் பொய்யான மிரட்டல் விடுத்த விடுத்த 14 வயது பாடசாலை மாணவன் விமான நிலைய பொலிஸாரால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவர் நேற்று விமான நிலையஅவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்து – அங்குள்ள இரண்டாவது முனையத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறியதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அதிகாரிகள் குறித்த பகுதியை சோதனை செய்தனர். ​​சில நிமிடங்களில் மாணவர் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு வெடிகுண்டு இல்லை என்றும் பகிடிக்காக தான் அப்படி சொன்னதாகவும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் களுபோவில பிரதேசத்தில் வசிக்கும் குறித்த மாணவனை வரவழைத்த பொலிசார், பின்விளைவுகளை உணராமல் அவரால் மேற்கொண்ட அழைப்பு குறித்து வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இதனையடுத்து அவரை கடுமையாக பொலிஸார் கண்டித்தனர். தான் செய்த செயலின் தீவிரம் தனக்கு தெரியவில்லை அந்த மாணவர் கூறியதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

Comments