பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் நீடிப்பு

🕔 March 25, 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் சேவைக் காலம் – மூன்று மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் இம்மாதம் 20ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த  நிலையிலேயே இவ்வாறு அவரின் சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவருக்கு அடுத்து பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோருக்கிடையில் போட்டி நிலவுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றச்சாட்டுகள் உள்ளவர்களுக்கு பொலிஸ் மா அதிபர் பதவியினை வழங்க வேண்டாம் என, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்