கோதுமை மா, சீனி உள்ளிட்ட 07 பொருட்களுக்கு விலை குறைப்பு

🕔 March 9, 2023

ழு பொருட்களின் விலைகளை – சதொச நிறுவனம் இன்று (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1500 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விலை 230 ரூபாவாகும்.

அத்துடன், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுது. புதிய விலை 339 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 218 ரூபாவாக உள்ளது.

உள்ளூர் சிவப்பரிசி ஒரு கிலோவின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 155 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் உள்ளூர் நாட்டரிசி 7 ரூபாவாலும், பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை 6 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அவற்றின் புதிய விலைகள் முறையே 188 ரூபா மற்றும் 129 ரூபாகும்.

Comments