வழக்கு ஒன்றுக்கு செல்லவிருந்தவரை சுடுவதற்கு முயற்சி: துப்பாக்கி இயங்காததால் தாக்குதல் தோல்வி

🕔 March 7, 2023
கைப்பற்றப்பட்ட வாகனம்

முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று (07) இன்று கொழும்பு முக்துவாரம் பகுதியில் பதிவானது.

குறித்த நபர் இன்றைய தினம் வழக்கொன்றுக்காக செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை துப்பாக்கி சரியாக இயங்காத காரணத்தினால் இந்த தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதல்தாரிகள்பயணித்த வாகனத்தை கிராண்பாஸ் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், வாகனத்திலிருந்து ரி56 துப்பாக்கியும், 9எம்எம் துப்பாகி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வாகனம் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது.

சந்தேகநபர்கள் வாகனத்தை ஹிங்குருகொட சந்தியில் புதிய பாலத்தின் கீழ் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்