‘கோப்’ குழுவிலிருந்து விலக, மயந்த திஸாநாக்க தீர்மானம்

🕔 February 27, 2023

ரசாங்க நிதி பற்றிய குழுவின் (கோப் – COPE) தலைவர் பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில், அரசாங்க  நிதி பற்றிய குழுவின் தலைவராக மயந்த திஸாநாயக்கவை ஆளும் கட்சி முன்மொழிந்தது.

அந்தப் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்தது. 

எனினும், ஆளுங்கட்சியினரால் பரிந்துரைக்கப்பட்ட மயந்த திஸாநாயக்க பெரும்பான்மை வாக்குகள் மூலம் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவராக தெரிவானார்.

பின்னர், இந்த விடயம் நாடாளுமன்றத்திலும்,  பொது வெளியிலும் பெரும் விவாதங்குள்ளானது.

இந்த நிலையில், மயந்த திஸாநாயக்க குறித்த பதவியிலிருந்து விலகும் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்