உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த

🕔 January 17, 2016

Mahinda - 094ள்ளுராட்சி சபைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால், கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை முன்பு இருந்தவர்களிடம் வழங்கி, மீளவும் இயங்கச் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடமேல் மாகாண உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நேற்று சனிக்கிழமை வடமேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ. பீ. ஹேரத்தின் வாரியபொல இல்லத்தில் இடம்பெற்றது.

இதனையடுத்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

வடமேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அந்த மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மேற்படி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்