“கௌரவ மகனார்ர சபை முதல்வர் அவர்களே”: அக்கரைப்பற்று மேயரை சபை அமர்வில் விளித்த தேசிய காங்கிரஸ் உறுப்பினர்: கிண்டலா, தவறுதலா?

🕔 February 22, 2023

க்கரைப்பற்று மாநகர சபை அமர்வு இன்று புதன்கிழமை (23) நடைபெற்ற போது, வயிறு வலிக்கச் சிரிக்கும் வகையிலான சுவாரசியமான நிகழ்வொன்று இடம்பெற்றது.

அதற்கு முன்னர் அந்தச் சுவாரசியத்தை விளங்கிக் கொள்வதற்காக ஒரு கிளைக்கதையை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் புதல்வர் அஹமட் சக்கி என்பவர்தான் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக பதவி வகிக்கிறார்.

அக்கரைப்பற்று மாநகரசபையை – தான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அதாஉல்லா உருவாக்கினார். அப்போதிருந்து இப்போது வரை, அவரின் மகன்தான் மேயராக உள்ளார்.

இதனால், அதாஉல்லாவின் குடும்ப அரசியலை விமர்சிப்போர், அக்கரைப்பற்று மாநகர சபையை – ‘மகனார்ர’ சபை என்று கிண்டலாகக் கூறுவதுண்டு.

இது இப்படியிருக்க, இன்று நடைபெற்ற அக்கரைப்பற்று மாநகர சபை அமர்வில், அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் பதுர் ஹாஜியார் என்பவர், உரையாற்றிய போது, அவரின் உரையின் ஆரம்பத்தில் மேயரை விளிக்கையில், “கௌரவ மகனார்ர சபை முதல்வர் அவர்களே” என்று கூறி விட்டார்.

இப்படி அவர் கூறுயமை – தவறுதலா? அல்லது கிண்டலாகத்தானா எனத் தெரியவில்லை.

“மனசுக்குப் பிடித்த பாடலை நாம் எதேற்சையாக முணுமுணுப்பதில்லையா? அதுபோல், பதுர் ஹாஜியாரின் மனதுக்கு இந்த வார்த்தை மிகவும் பிடித்து விட்டதாக்கும்” என்று அக்கரைப்பற்று மாநர சபை உறுப்பினர்கள் சிலர் – ‘புதிது’ செய்தித்தளத்திடம் சொல்லிச் சிரித்தததோடு, அந்த ஒலிப்பதிவையும் வழங்கினர்.

உறுப்பினரின் குரல் பதிவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்