ரோஹித ராஜபக்ஷ ஏவிய ரொக்கட்டை சீனா தேடிக் கொண்டிருக்கிறது; 332 மில்லியன் டொலர் நாட்டுக்கு நஷ்டம்: முன்னாள் எம்.பி வசந்த சமரசிங்க

🕔 February 14, 2023

கிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ, சீனாவில் ரொக்கெட் செய்வதற்காக 332 மில்லியன் டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 12 ஆயிரத்து 56 கோடி ரூபாவுக்கும் அதிகமானது) செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே – அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து பேசுகையில்;

“ரோஹித அனுப்பியதாகக் கூறப்படும் ரொக்கட் எங்கே போனது என்று சீனாவும் தேடிக்கொண்டிருக்கின்றது. மோசடி செய்யப்பட்ட பணம் எங்கே என்று நாடு தேடிக்கொண்டிருக்கின்றது”.

“மகிந்தவின் இளைய மகன் கடன் கொடியை உயர்த்தியுள்ளார். நாட்டின் பணத்தை செலுத்தி சிங்கராஜாவில் ஹோட்டல் கட்டியுள்ளார். கல்யாணத்துக்கு பிறகு முப்பத்தாறு கோடியில் கோட்டே துவா வீதியில் வீடு வாங்கினார். மறுபுறம் உள்ள நிலத்தையும் நாற்பத்தைந்து கோடி ரூபா கொடுத்து வாங்கியிருந்தார். தற்போது அவரிடம் மூன்று நிலங்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு குறித்த ரொக்கட் சீனாவிலிருந்து ஏவப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்