அமெரிக்க வானில் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் அறிவிப்பு

🕔 February 13, 2023

மெரிக்காவின் வான்பரப்பில் பறந்த மற்றுமொரு மர்ம பொருள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

கனடாவின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்கா – கனடா வான்வெளியை பாதுகாக்கும் இரு நாட்டு கூட்டுப் படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எஃப் – 22 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது

குறித்த பொருளை மீட்டெடுப்பதற்கு எதிர்பாப்பதாகவும், அது ஏரியொன்றினுள் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி மர்மப்பொருள் 20 ஆயிரம் அடி உயரத்தில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருக்கு இடையில் தொலைப்பேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள லேக் ஹரான் பகுதியில் பறந்த மற்றுமொரு மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் அண்மையில் சுட்டு வீழ்த்தியது

இதற்கமைய, ஒரே மாதத்தில் 4வது முறையாக, அமெரிக்க வான்பரப்பில் பரப்பில் வைத்து மர்ம பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்