சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷனவுக்கு பிணை

🕔 February 6, 2023

துபாயில் இருந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தர்ஷன ஹந்துங்கொட – கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு துபாயிலிருந்து நாடு திரும்பிய தர்ஷன, பண்டாரநாயக்க விமான சிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தொடர்பான செய்தி: சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது: குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல்

Comments