சுஜீவவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் முக்கிய பதவிகள்

🕔 February 2, 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் திட்டமிடல் மற்றும் விரிவாக்கல் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்களை கட்சியின் தலைவர் சஜீத் பிரேமதாஸ வழங்கியுள்ளார்.

2020 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், சுஜீவ சேனசிங்க – தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்