ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மன்னிப்புக் கோரினார்

🕔 January 31, 2023

லங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன – கத்தோலிக்க மக்களிடமும், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுடன் பேசிய அவர்; தனது பதவிக் காலத்தில் இதுபோன்ற சோகமான சம்பவம் நடந்தமைக்கு மன்னிப்பு கோரியதோடு, அந்தத் தாக்குதல்கள் தான் அறிந்திருக்கவில்லை என்றும் கூறினார்.

“நான் குற்றமொன்றைச் செய்துள்ளதாக நீதிமன்றம் தீர்வு வழங்கவில்லை. ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்த குற்றங்களுக்கும் ஜனாதிபதி பொறுப்புக் கூற வேண்டும் என்பதனால், இது வழக்குடன் நான் தொடர்புபட்டுள்ளேன்” என்றும் அவர் விளக்கமளித்தார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் மைத்திரி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்