நண்பரின் ஆணுறுப்பை வெட்டிய நபர்: பதுளை மாவட்டத்தில் ‘வெறி’ச் செயல்

🕔 January 31, 2023

போதையில் இருந்த ஒருவர் நண்பர் ஒருவரின் ஆணுறுப்பை கூரிய ஆயுதத்தால் வெட்டிய சம்பவமொன்று பதுளை மாவட்டம், வியலுவ – தல்தென பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆணுறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயத்துக்குள்ளான நபர், மீகஹகியுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

55 வயதுடைய வியலுவ – தல்தென பிரதேச நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் – நேற்று (30) இரவு அளவுக்கதிகமாக மது அருந்திய நிலையில் மயக்கமடைந்துள்ளார்.

அதன்போது, அவருடன் மது அருந்திய நண்பர் – கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தினால், மயங்கிக்கிடந்த நபரின் ஆணுறுப்பை வெட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட நபரை அவரின் – ஏனைய நண்பர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்