வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான பணத் தொகை குறித்து அறிவிப்பு: அடுத்த வாரம் பணி ஆரம்பம்

🕔 January 30, 2023

ள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 30 கோடி ரூபா வரையில் தேவைப்படுவதாக அரச அச்சகத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 01 கோடிக்கும் அதிகமான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பார்த்துள்ளது.

அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக பதிப்பக செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 20 கோடி ரூபா செலவிடப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகளை அடுத்த வாரம் தொடக்கம் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அரசஅச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்