போதைப் பொருள் கடத்தல்காரி ‘டிஸ்கோ’ கைது

🕔 January 30, 2023

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ‘டிஸ்கோ’ என அழைக்கப்படுகின்ற தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா, ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொழும்பு 15, மோதர, கோவில் வீதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவராவார். அவரிமிருந்து இருந்து 4 கூரிய ஆயுதங்களும் 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பிரான்சில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் மற்றும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ரூபன்’ என்பவருடன் நேரடி தொடர்பில் உள்ளதாகவும், இலங்கையில் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்