நாடாளுமன்றம் பெப்ரவரி 08 வரை ஒத்தி வைப்பு

🕔 January 27, 2023

ன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை இன்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை – எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைப்பார்.

புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் சம்பிரதாயப்படி ஜனாதிபதி – அக்கிராசன உரை நிகழ்த்துவார்.

அந்தவகையில் நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும் அக்கிராசன உரையில் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக நாட்டில் அமுல்படுத்த தீர்மானித்திருக்கும் புதிய கொள்கைகள், புதிய சட்டங்கள், 2023 2048ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் சுதந்திர தினத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு ஏற்றவாறு நாட்டின் முன்னேற்றத்திற்காக கட்சி, நிறம், இனம், மத பேதமின்றி கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படும்.

(ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்