நீதிமன்றக் கூண்டிலிருந்த கைதிக்கு ‘பீடி’ கொடுத்தவருக்கு கடூழிய சிறை: அக்கரைப்பற்று நீதவான் உத்தரவு

🕔 January 12, 2023

– அயான் அஹமட் –

நீதிமன்ற சிறைக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு, பீடிகளை வழங்க முற்பட்ட நபர் ஒருவருக்கு – மூன்று மாத கால கடூழிய சிறைத்தண்டனையுடன் அபராதத்தையும் விதித்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, இவ்வாறு நடந்து கொண்ட நபர் ஒருவருக்கு எதிராக, இந்தத் தீர்ப்பு இன்று (12) வழங்கப்பட்டது.

நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிந்த போது, நீதிமன்ற சிறைக்கூண்டிலிருந்த  நபர் ஒருவருக்கு – வெளியிலிருந்த நபரொருவர், புகையிலை கலந்த பீடியை வழங்குவதற்கு முற்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு – உடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, குறித்த நபருக்கு 1500 ரூபா அபராதமும் மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி நீதவான் தீர்ப்பளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்