ஆஷு மாரசிங்க மீது குற்றம் சுமத்திய ஆதர்ஷா கரந்தனா கைது

🕔 January 11, 2023

பேராசிரியர் ஆஷு மாரசிங்க – நாயொன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டியதோடு, அது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்ட ஆதர்ஷா கரந்தனா கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் கணினி குற்றப் பிரிவினர் இவரை கைது செய்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஷு மாரசிங்கவும், ஆதர்ஷா கரந்தனாவும் திருமணம் செய்யாமல் இரண்டு வருடங்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.

ஆதர்ஷா கரந்தனாவின் வளர்ப்பு நாயினையே ஆஷு மாரசிங்க – பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த மாதம் ஆதர்ஷா கரந்தனா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஆகியோர் நடத்திய ஊடக சந்திப்பில், ஆஷு மாரசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தொடர்பான செய்தி: நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முன்னாள் எம்பி: ஆசு மாறசிங்க மீது குற்றச்சாட்டு: வீடியோ காட்சியும் அம்பலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்