இரட்டைக் குடியுரிமையைப் பெற, ஆயிரக் கணக்கானோர் விண்ணப்பம்

🕔 December 28, 2022

ரட்டைக் குடியுரிமையைப் பெற்றதற்காக கடந்த ஆண்டில் மொத்தமாக 5,401 நபர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்களாவர். இவர்கள் 1,621 நபர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இரட்டைக் குடியுரிமையைப் பெற விண்ணப்பித்தவர்களில் ஐக்கிய ராச்சியத்தைச் சேர்ந்த 885 நபர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேர், கனடாவைச் சேர்ந்த 371 பேர் மற்றும் இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து பலர் அடங்குகின்றனர்.

இதேவேளை, நாட்டை விட்டு வெளியேறுகின்றவர்களின் தொகையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்