அதிக உணவுப் பணவீக்கமுள்ள முதல் 10 நாடுகளில், இலங்கையும் உள்ளடக்கம்

உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கமுள்ள – முதல் 10 நாடுகளில் இலங்கை 7வது இடத்தில் உள்ளதாக, உலக வங்கியின் சமீபத்திய மதிப்பீடு தெரிவிக்கின்றது.
அதன்படி, சிம்பாவே, லெபனான், வெனிசுலா, துருக்கி, ஆர்ஜென்டினா மற்றும் ஈரான் ஆகியவை முதல் ஆறு நாடுகளில் – தரவரிசையில் உள்ளன. ருவண்டா, சுரினாம் மற்றும் ஹங்கேரி ஆகியவை இலங்கைக்கு அடுத்தடுத்து உள்ளன.
உலகம் முழுவதும் உள்நாட்டு உணவு விலை பணவீக்கம் அதிகமாக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 2022 ஓகஸ்ட் தொடக்கம் நொவம்பர் வரையிலான தகவல்களின்படி, கிட்டத்தட்ட அனைத்து குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் அதிக பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 88.2%, குறைந்த – நடுத்தர வருமான நாடுகளில் 90.7% மற்றும் மேல் – நடுத்தர வருமான நாடுகளில் 93% உணவுப் பணவீக்கம் ஏற்பட்டுள்ளன.
உயர் வருவாய் கொண்ட நாடுகளில், உணவுப் பொருட்களின் விலை பணவீக்கம் 81.8% ஆக உயர்ந்துள்ளது.
உணவுப் பொருள் பண வீக்கம் அதிகரித்தையின் காரணமாக ஆபிரிக்கா, வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தெற்காசியா, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.