கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்றும் வைபவம்: இன்று ஆரம்பம்

🕔 December 24, 2022

– எம்.என்.எம். அப்ராஸ், சர்ஜுன் லாபீர் –

ல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் 200 வது கொடியேற்றும் வைபவம், இன்று (24)ஆரம்பமானது.

குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் நினைவாக இந்த கொடியேற்றம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.  

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர்,  நிருவாகிகள், ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை மாநகர சபை பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம் அஸீம், கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்சீன் பக்கீர், மற்றும் கல்முனை கடற்படை முகாம் பொறுப்பதிகாரி ரொசன் விஜயதாச உள்ளிட்ட பலர் இவ் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

கொடியேற்றிய தினத்தில் இருந்து  தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன நடைபெறும்.

ஜனவரி (04)ஆம் திகதி கொடியிறக்கும் நிகழ்வுடன் வைபவம் நிறைவடையும். அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கிவைக்கப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்