பாடசாலைகளுக்கு அருகில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 17 வயது மாணவர் உட்பட 47 பேர் கைது

🕔 December 23, 2022

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது, மிரிஹானவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய பாடசாலை மாணவர் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு அருகாமையில் காலை 6.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை, இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சோதனையின் போது 1.260 கிலோ ‘மாவா’, 9.630 கிராம் ஹெரோயின் மற்றும் 2.38கிராம் ஐஸ்மற்றும் 207 கிராம் கஞ்சா ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.

இதன்போதே கஞ்சாவுடன் பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்