திருமணமாகாத பெண்களின் பங்களிப்பு குறித்து, புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல்

🕔 December 19, 2022

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கும் உற்பத்தி நடவடிக்கைகளில் திருமணமணமாகாத பெண்களை விடவும் திருமணமான பெண்களே அதிகமாக ஈடுபடுகின்றனர்.

புள்ளி விபரவியல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

திருமண நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட திருமணமான பெண்கள், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கும் உற்பத்தி நடவடிக்கைகளில் அதிகளவு பங்களிப்பை வகிக்கின்றனர் என, அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திருமணமான மற்றும் விதவை, விவாகரத்து, பிரிந்து வாழும் அதே வயதுடையவர்கள் பெண்களை விடவும், திருமணமாகாத பெண்களே மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கும் உற்பத்தி நடவடிக்கைகளில் நாளொன்றுக்கு அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் எனவும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்