‘சமாதான நல்லிணக்க செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்தல்’: வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வைபவம்

🕔 December 1, 2022

– அஹமட் –

‘பெண்களை சமாதான நல்லிணக்க செயற்பாடுகளில் வலுப்படுத்தல்’ எனும் திட்டத்தின்கீழ், பயிற்றப்படட்ட 05 கிராம மட்ட ‘வில்’ (WILL) கழக பெண் தலைவிகளின் செயற்திட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, நன்றி தெரிவிக்கும் வைபவம் நேற்று (30) காரைதீவிலுள்ள தனியார் மண்டபமொன்றில் நடைபெற்றது.

‘சேர்ச் ஃபோ கோமன் கிரௌண்ட்’ (Search for common ground) நிறுவனத்தின் அனுசரணையில், அக்கறைப்பற்று பாதிப்பற்ற பெண்கள் அரங்கத்தினால் ‘பெண்களை சமாதான நல்லிணக்க செயற்பாடுகளில் வலுப்படுத்தல்’ திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

‘வில்’ (WILL) கழக பெண்தலைவிகளால் எழுதப்பட்ட திட்ட முன்மொழிவுகளுக்கான நிதியை பெற்று, வெற்றிகரமாக அந்த செயத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி முடித்தமையின் அனுபவத்தை, பலத்தரப்பட்ட பங்குதார குழு மற்றும் ‘வில்’ கழக உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டு நன்றியை தெரிவிக்கும் வைபவமான இது இடம்பெற்றது.

அக்கரைப்பற்று ‘பாதிப்புற்ற பெண்கள் அரங்கு’ அமைப்பின் திட்ட இணைப்பாளர் கமலவாணி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் வி. ஜெகதீஸன் பிரதம அதிதியாகவும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஸாட் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது இத் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.

சேர்ச் ஃபோர் கொமன் கிரௌன்ட் நிறுவனத்தின் திட்ட ஆலோசகர் நளினி ரட்ணராஜா, கண்காணித்தல் மற்றும் கணக்கீட்டுக்கான பணிப்பாளர் எம்.ஐ.எம். சதாத், கிராமின் பௌண்டேசன் (இந்தியா) நிறுவனத்தின் பெண்கள் பொருளாதார வலுவூட்டல் ஆலோசகர் கே. சுபாஜினி, பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கு நிறுவனத்தின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியருமான அனுசியா சேனாதிராஜா, அந்த அரங்கின் இணைப்பாளர் வாணி சைமன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் மற்றும் தேசிய அபாயகர, ஔடத கட்டுப்பாட்டு சபையின் வக்கு – கிழக்கு இணைப்பாளர்  எம்.எம்.ஜி.பி.எம். றஸாட், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் அரச – அரச சார்பற்ற மேல்நிலை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் வைபவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் – மேடை நாடகமொன்றும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்