அரச ஊழியர்கள் அருகிலுள்ள பணியிடத்துக்கு இடமாற்றம் கோரும் வேலைத் திட்டம்

அரச ஊழியர்கள் அருகிலுள்ள பணியிடத்திற்கு இடமாற்றம் கோருவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தூரப் பிரதேசங்களுக்கு கடமைக்காக செல்லும் அரச ஊழியர்கள் போக்குவரத்துக்காக அதிக பணம் செலவிட நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.