லுணுகல பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையும் தோல்வி

🕔 November 25, 2022

லுணுகல பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நேற்று (24) மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பதினைந்து நாட்களுக்கு முன்னரும் குறித்த பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

லுணுகல பிரதேச சபையின் பெரும்பான்மை பலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடமுள்ள போதும், அதன் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதேச சபையின் தலைவர் சந்திர தலுகொட்டுவ சமர்ப்பித்த பின்னர், அதற்கு எதிராக 13 வாக்குகளும் ஆதரவாக 04 வாக்குகளும் கிடைத்தன. மூவர் வாக்களிக்கவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்