போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கடந்த வருடம் கைது

🕔 November 24, 2022

லங்கையில் போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் கடந்த வருடம் 01 லட்சத்து 10 ஆயிரத்து 31 பேர் கைது செய்யப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களில் 46 சதவீதமானோர் ஹெரோயின் குற்றங்களுடனும், 40 சதவீதமானோர் கஞ்சா தொடர்பான குற்றங்களுடனும் தொடர்புபட்டவர்களாவர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் (57 சதவீதமானோர்) கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்