ஒபாமா சிந்தியது வெங்காய கண்ணீர்: ஃபாக்ஸ் நியூஸ் விமர்சனம்

🕔 January 12, 2016

Obama -  085துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து கடந்த வாரம் உரை நிகழ்த்திய ஒபாமா, யதார்த்தமாக அழவில்லை. கண்களில் வெங்காயத்தை தேய்த்து கொண்டு தான் அழுதார் என்று ஃபாக்ஸ் நியூஸ் சேனல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பெரும் பிரச்சினையாக அச்சுறுத்திவரும் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார் அந்நாட்டு ஜனாதிபதி ஒபாமா.

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் துப்பாக்கிச்சூட்டினால் ஒரு லட்சம் பேர் இறந்துள்ளதையும் 2012-ல் சாண்டி ஹூக் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் பலியான சம்பவமும் தனது நெஞ்சை மிகவும் உலுக்கியதாக கூறி, கண்ணீர் சிந்தினார் அவர்.

அமெரிக்க ஜனாதிபதியின் அழுகை, அமெரிக்காவினை மட்டுமல்லாது சர்வதேச நாடுகளையும் திரும்பி பார்க்கச் செய்தது.

இந்த நிலையில், “அந்த கருத்தரங்கில் ஒபாமா உண்மையாக அழவில்லை. அவரது அழுகை நம்பும்படியாகவே இல்லை. கண்ணில் வெங்காயத்தை தேய்த்துக்கொண்டே அவர் செயற்கையாக கண்ணீரை வரவழைத்திருக்கிறார். அது ஒன்றும் விருது வழங்கும் விழா அல்ல, அங்கு அழுது அனைவரையும் ஈர்ப்பதற்கு” என்று ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) செய்தி சேனல் அரசியல் விமர்சகர் ஆண்ட்ரியா டாண்டரோஸ் கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸின் இந்தச் செய்தி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒபாமா ஆட்சி நிர்வாகத்தில் அதிக அளவில் விமர்சனத்துக்கு உள்ளானது துப்பாக்கி கலாச்சார விவகாரம் ஆகும்.

அந்த வகையில் ஆண்ட்ரியா டாண்டரோஸின் விமர்சனம் மேலும் இதனை சூடுபடுத்தியுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்