கஞ்சாவை நாடாளுமன்றில் போற்றிப் புகழ்ந்த ராஜித சேனாரத்ன

🕔 November 19, 2022

ஞ்சாவை ஒரு மருந்தாக ஏற்றுமதி செய்வதற்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு பாராட்டத்தக்கது என, முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நாடாளுமன்றில தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் பாதுகாப்பு படையினரின் கீழ் கஞ்சாவை பயிரிடுவதற்கு தான் முன்மொழிந்ததாகவும், பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக அதனை செய்ய முடியவில்லை என்றும் அவர் இதன்போது கூறினார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இலங்கைக்கு கஞ்சா ஏற்றுமதி மூலம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கஞ்சா இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடையது என்றும், பிரித்தானிய காலனித்துவ காலத்தில் புகையிலையை அறிமுகப்படுத்திய பின்னர் அது தடைசெய்யப்பட்டதாகவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்