மாணவர்கள் இருவருக்கு இடையிலான சண்டையில், ஒருவர் பலி: திருக்கோவில் பாடசாலையில் சோகம்

🕔 November 8, 2022

திருக்கோவில் பகுதி, பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

13 வயதான மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் தாக்குதலுக்குள்ளான நிலையில் திருக்கோவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய மாணவர் காயமடைந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்