உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயக் குழு; மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நியனம்:

🕔 November 5, 2022

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டார எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணய குழுவை நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த குழுவை நியமித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 03ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

குழுவின் உறுப்பினர்களாக ஜயலத் ஆர்.வி. திஸாநாயக, டப்ளியு.எம்.எம்.ஆர். அதிகாரி, கே. தவலிங்கம் மற்றும் ஐ.ஏ. ஹமீட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்